COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை!
தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: “தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்” என குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) தலைவர் டாக்டர். கே.ராஜேந்திரன் கூறியது: “நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் புதிய வகை வேகமாக பரவி வருகிறது. இது ‘ஓமிக்ரான்’ வகையின் துணை உருவான வைரஸாகும். தற்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
What's Your Reaction?