ஆராய்ந்து பார்க்க காட்டுக்குள் போ! - ஓடிடி உலகம் | விவேசினி

எதிர்பாராத விதமாக அவரால் செல்ல முடியவில்லை. என்றாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று தன்னுடைய மகள் சக்தியையும் (காவ்யா) அவளுடைய நான்கு நண்பர்களையும் வனநடையாக அந்த வனப்பகுதிக்குள் அனுப்புகிறார்.

Nov 22, 2024 - 13:30
 0  4
ஆராய்ந்து பார்க்க காட்டுக்குள் போ! - ஓடிடி உலகம் | விவேசினி

உருப்படியான திரை அனுபவத்தைத் தரும் விறுவிறுப்பான படங்களைக்கூட தவறவிடுவது சகஜமாகிவிட்டது. பவன் ராஜகோபாலன் எழுத்து, இயக்கத்தில் வெளியான ‘விவேசினி’யைத் திரையரங்குகளில் தவறவிட்டிருந்தால் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் அதைக் காணலாம்.
நறவங்காந்தம் என்கிற வனப்பகுதிக்குப் பெண்கள் செல்லத் தடை இருக்கிறது.

காரணம், அங்கே பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறி, அப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை அச்சமுடன் வாழப் பழக்கியிருக்கிறார்கள். பகுத்தறிவுப் பிரச்சாரகரான ஜெயராமன் (நாசர்) தடை செய்யப்பட்ட பகுதியில் பேய் என்று ஒன்று இல்லை, அது கட்டுக்கதை என நிரூபிக்க அங்கே செல்ல முயல்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow