அழகர்கோவில் சித்திரைத் திருவிழா: மே 12-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு!

மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12-ம் தேதி நடைபெறுகிறது.

Apr 8, 2025 - 20:35
 0  3
அழகர்கோவில் சித்திரைத் திருவிழா: மே 12-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு!

மதுரை: மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12-ம் தேதி நடைபெறுகிறது.

உலகப் புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள். சைவம், வைணவத்தின் இணைப்புத் திருவிழாவாக நடைபெறும் இத்திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை பக்தி பரவசத்துடன் கள்ளழகரை வரவேற்பார்கள். அத்தகைய சிறப்புக்குரிய சித்திரைத் திருவிழா குறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞநாராயணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow