வைகாசி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

ராமேசுவரத்தில் வைகாசி  அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னீ தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

May 26, 2025 - 18:10
 0  3
வைகாசி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னீ தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகாவிலும் இருந்து பக்தர்கள் ராமேசுவரம் வரத் துவங்கினர். திங்கட்கிழமை அதிகாலை ராமநாதசுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகளும் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow