அரசியல் எதிரிகளின் கொலை முயற்சியில் இருந்து நானும் சகோதரியும் 20 நிமிட இடைவெளியில் உயிர் தப்பினோம்: ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாகவும், 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்ததாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

Jan 19, 2025 - 05:45
 0  3
அரசியல் எதிரிகளின் கொலை முயற்சியில் இருந்து நானும் சகோதரியும் 20 நிமிட இடைவெளியில் உயிர் தப்பினோம்: ஷேக் ஹசீனா

புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாகவும், 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்ததாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் போராட்டதால், அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் வங்கதேச நீதிமன்றம், ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது. ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த 15 ஆண்டு பதவி காலத்தில், மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்தார் எனவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow