அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2.0 - இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமா, பாதகமா?
ட்ரம்ப் 2.0 காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியா இடையிலான உறவு எப்படி இருக்கும்? அது வர்த்தகத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பன போன்ற கேள்விகள் இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளன.

கல்வி, பொருளாதாரம், ஆயுத பலம், நேச நாடுகள் (நேட்டோ), யு.எஸ்.டாலரின் உலக செல்வாக்கு என பலவற்றிலும் முன்னணியில் இருக்கும் 34 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள 78 வயது டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் மீது கொலை முயற்சித் தாக்குதல் நடைபெற்றது. ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..’ என்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிக்குறைப்பு, இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் நல்ல வேளையாக தெளிவான முடிவைக் கொடுத்து, முடிந்திருக்கிறது அதிபர் தேர்தல். ட்ரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உற்சாகம் அடைந்துள்ளன. பிட்காயின் விலை உயர்வு, தங்கம், வெள்ளி விலையும் மறுவினையாற்றி இருக்கின்றன.
What's Your Reaction?