700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்

76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Nov 14, 2024 - 09:35
 0  4
700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்

சென்னை: 76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருன் 52-வது ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இணைத்து நடத்தப்படுகிறது.

இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச சைக்கிளிங் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த போட்டியை நாளை (15-ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த தொடரில் தமிழகத்தில் இருந்து மட்டும் 40 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தான்யா பங்கேற்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow