தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப், தமிழ்நாடு அதிர்ச்சி தோல்வி
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது.

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், மணிப்பூர் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
பஞ்சாப் அணி தரப்பில் மணீந்தர் சிங் (18-வது நிமிடம்), ரவ்னீத் சிங் (24 மற்றும் 59-வது நிமிடங்கள்) கோல் அடித்தனர். மணிப்பூர் அணி சார்பில் கேப்டன் சிரில் லுகுன் ஹாட்ரிக் கோல் (14, 36 மற்றும் 51-வது நிமிடம்) அடித்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
What's Your Reaction?