‘ஐஸ்கிரீம் சாப்பிடும் வயதில்’ - வைபவ் சூர்யவன்ஷி குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார்.

Apr 29, 2025 - 12:20
 0  3
‘ஐஸ்கிரீம் சாப்பிடும் வயதில்’ - வைபவ் சூர்யவன்ஷி குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார். அவருக்கான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிலிருந்து இதோ சில பாராட்டு பொன்முத்துக்கள்…

யூசுப் பதான்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்துள்ளீர்கள். அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது இரட்டை மகிழ்ச்சி. நானும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காகத்தன் என் சாதனை சதத்தை எடுத்தேன். இளம் வீரர்களுக்கு இந்த பிரான்சைஸ் செய்வது உண்மையில் மேஜிக்தான். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சாம்பியன்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow