வரி, இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே கனடாவில் ஆட்சியைப் பிடித்த லிபரல் கட்சி!

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

Apr 29, 2025 - 13:55
 0  3
வரி, இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே கனடாவில் ஆட்சியைப் பிடித்த லிபரல் கட்சி!

ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரி, இணைப்பு அச்சுற்றுத்தல்களுக்கு இடையே கிடைக்கப் பெற்ற இந்த வெற்றியை பிரதமர் மார்க் கார்னி உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “தேர்தல் முடிவுகள், கனடாவை ஆதரிக்கவும் அதனை வலுவாகக் கட்டியெழுப்பவும் மக்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். வரவிருக்கும் நாட்களும் மாதங்களும் சவாலானதாக இருக்கும். அவை சில தியாகங்களை கோரும். ஆனால் எங்கள் தொழிலாளர்களையும் எங்கள் வணிகங்களையும் ஆதரிப்பதன் மூலம் அந்த தியாகங்களைப் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்க துரோகத்தின் பாடங்களை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம்.” என்று வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow