‘நல்ல படம் மக்களைக் கண்டிப்பாக சேரும்’ - ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ இயக்குநர் நம்பிக்கை

விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.

Nov 14, 2024 - 10:35
 0  3
‘நல்ல படம் மக்களைக் கண்டிப்பாக சேரும்’ - ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ இயக்குநர் நம்பிக்கை

விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா.

அவர் கூறும்போது, “ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். படம் வெளியானதுமே பார்த்துவிட்டு திரைத்துறையினர் பலர் பேசினார்கள். நடிகர் விஜய் சேதுபதி, ‘10 நிமிடம் பார்க்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், கதை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. வாழ்த்துகள்’ என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow