இசை அமைப்பாளர் ஜனனி பங்கேற்ற இசை ஆல்பம் கிராமி விருதுக்கு பரிந்துரை
பாஸ்கர் சக்தி இயக்கிய ‘ரயில்’ மற்றும் ‘பிரபா’ படங்களுக்கு இசை அமைத்தவர் எஸ்.ஜே.ஜனனி.

பாஸ்கர் சக்தி இயக்கிய ‘ரயில்’ மற்றும் ‘பிரபா’ படங்களுக்கு இசை அமைத்தவர் எஸ்.ஜே.ஜனனி. பின்னணி பாடகியுமான இவர், கர்னாடிக், இந்துஸ்தானி, வெஸ்டர்ன் இசையில் நன்கு பயிற்சி பெற்றவர். இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஜனனி, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் அடுத்து சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல மேற்கத்திய இசைக் கலைஞர் அண்டானியோ வெர்காராவின் புதிய இசை ஆல்பமான ‘த ஃபியூரி’யில் ஒரு பாடலை பாடியுள்ளார். 13 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தில் பல்வேறு சர்வதேச இசைக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் எஸ்.ஜே.ஜனனியின் பங்களிப்பு ஆல்பத்தின் தனித்தன்மையை அளித்துள்ளது.
What's Your Reaction?