60 குடவரை கோயில்களை உருவாக்கிய பாண்டியர்கள்!
தமிழகத்தில் கிபி. 7-ம் நூற்றாண்டில் இருந்துதான் கோயில் நமக்கு காணக் கிடைக்கின்றன. அதற்கு முன்பு கோயில்கள் இருந்தாலும், அவை எந்த மாதிரியான வடிவ அமைப்பில் இருந்தன என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் கிபி.7-ம் நூற்றாண்டில் இருந்துதான் கோயில் நமக்கு காணக் கிடைக்கின்றன. அதற்கு முன்பு கோயில்கள் இருந்தாலும், அவை எந்த மாதிரியான வடிவ அமைப்பில் இருந்தன என்பது தெரியவில்லை. 7-ம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த கோயில்கள் அனைத்தும் மரம், செங்கல், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களால் கட்டப்பட்டிருக்கும் என்பதால், அவை காலப்போக்கில் மறைந்துவிட்டன. தமிழரின் பண்பாட்டில் இறந்தவர்களையே இறைவனாக வழிபடும் வழக்கமும் இருந்ததால், அவர்களுக்கென நடுகல் வைத்து வழிபட்டனர்.
தமிழகத்தின் வடபகுதியை கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆண்ட பல்லவர்கள் சாளுக்கியரோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பால், அவர்கள் நாட்டில் இருந்த குடவரைக் கோயில்களை பார்த்து அதுபோன்று இங்கும் குடவரைக் கோயில்களை அமைத்திருக்கலாம் எனத் தெரிகிறது. இவர்களது சமகாலத்தவரான பாண்டியர்கள் மலையைக் குடைந்து சுமார் 60 குடவரைக் கோயில்களை கட்டியுள்ளனர்.
What's Your Reaction?