'மியாவ்' என்றால் என்ன? | உயிரினங்களின் மொழி - 4
பூனைகளின் முதல் மொழி, அவற்றின் உடல் அசைவு. உங்கள் பூனை உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறதா? அது உங்களிடம், ’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்கிறது! தன் வாலை நேராக நிமிர்த்திக்கொண்டு வருகிறதா? அது ஓர் அன்பான வணக்கம். குறுக்காக வாலை ஆட்டுகிறதா? ’நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்.

நீண்ட காலமாக மனிதர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் விலங்குகளில் பூனைகளுக்கு முக்கிய இடம் உண்டு. எகிப்திய நாகரிகத்தில் கடவுளாக வணங்கப்பட்டவை. மென்மையான நடையும் கூர்மையான பார்வையும் கேட்கும்திறனும் கொண்டவை பூனைகள். நாம் நினைப்பதை விடவும் நுட்பமான மொழியாற்றலைக் கொண்டுள்ளன.
இரவில் மின்னும் கண்கள், நுனி வரை நிமிரும் வால், மென்மையான நடை, விளையாட்டு ஆர்வம் என இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தகவல் பரிமாற்றம். அவற்றின் ஒவ்வோர் அசைவும் ஒலியும் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவிக்கும்.
What's Your Reaction?