1039வது சதய விழா | அரசு சார்பில் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிப்பு
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா தொடங்கியுள்ள நிலையில், அரசு சார்பில் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா தொடங்கியுள்ள நிலையில், அரசு சார்பில் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பிறகு, திருமுறை நூலை யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது.
What's Your Reaction?