தொழில் பூங்கா திட்டத்தால் கோவையில் புத்துயிர் பெறும் தங்க நகை தொழில்!

தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

Nov 11, 2024 - 18:30
 0  3
தொழில் பூங்கா திட்டத்தால் கோவையில் புத்துயிர் பெறும் தங்க நகை தொழில்!

கோவை: தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. 25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இத்தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா,லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow