“என் அம்மா 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார்” - திவ்யா சத்யராஜ் உருக்கம்

“என் தாயார் கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு ட்யூப் மூலமாக தான் உணவு கொடுத்து வருகிறார். அப்பா தான் தாய்க்கு தாயாக இருந்து என்னையும் அம்மாவையும் கவனித்து வருகிறார்” என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Nov 11, 2024 - 18:25
 0  5
“என் அம்மா 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார்” - திவ்யா சத்யராஜ் உருக்கம்

சென்னை: “என் தாயார் கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு ட்யூப் மூலமாக தான் உணவு கொடுத்து வருகிறோம். அப்பா தான் தாய்க்கு தாயாக இருந்து என்னையும் அம்மாவையும் கவனித்து வருகிறார்” என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “சிங்களில் பேரன்ட்ஸ்கள் அனைவரையும் பாராட்டும் வகையிலான பதிவு இது. கடந்த 4 ஆண்டுகளாக என்னுடைய தாயார் கோமாவில் இருந்து வருகிறார். வீட்டில் இருக்கும் அவருக்கு உணவு கூட ட்யூப் வழியாக தான் கொடுத்து வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். ஆனால், அம்மா விரைவில் குணமடைந்துவிடுவார் என நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow