உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது.

Oct 9, 2025 - 15:50
 0  2
உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை: ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சிறந்த இடம் பிடிக்க செய்த அமைச்சர் அன்பரசனின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதுபோன்ற தொழில் மாநாடுகள் தமிழக வளர்ச்சி மட்டுமல்லாமல் இந்திய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow