ஆதரவற்றோரின் பசியாற்றும் குமரி - வெள்ளிச்சந்தை போலீஸாருக்கு குவியும் பாராட்டு!
ஆதாரவின்றி தவித்து வருவோர் பசியாறுவதற்கான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வரும் போலீஸாரின் உதவிக்கரம் நெகிழ வைத்துள்ளது. வெள்ளிச்சந்தை எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் மேற்கொள்ளும் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு குவிகிறது.

நாகர்கோவில்: ஆதாரவின்றி தவித்து வருவோர் பசியாறுவதற்கான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வரும் போலீஸாரின் உதவிக்கரம் நெகிழ வைத்துள்ளது. வெள்ளிச்சந்தை எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் மேற்கொள்ளும் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு குவிகிறது.
விஞ்ஞானம், நவீன வளர்ச்சி என முன்னேற்றங்கள் எத்தனைத்தான் இருந்தாலும், பிள்ளைகள் கைவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் வயதான பெற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், கணவன் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள் என கிராமந்தோறும் ஆதரவற்ற பலரை காணமுடிகிறது. அன்றாட விருப்பு, வெறுப்புகளின்றி ஒருவேளை உணவுக்காக இவர்கள் திண்டாடும் அவலம் உள்ளது.
What's Your Reaction?