ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் காலமானார்
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் (84) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த ஒரு வருடமாக நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் (84) உடல் நலக்குறைவால் காலமானார்.
ஹாலிவுட்டில் வெளியான காமெடி படமான, ‘அனா’, ‘கோல்டு பீட்’, ஹாரர் படமான ‘த ஹாண்டட்’, ஃபேன்டஸி படமான `புரூஸ் அல்மைட்டி' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சாலி கிர்க்லேண்ட். `அனா' படத்தில் இவர் நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு அப்படம் பரிந்துரைக்கப் பட்டது. ஆனால் அவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
What's Your Reaction?