நிறத்தை வைத்து கிண்டல் - கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த பதிலடி!

தனது நிறம் குறித்து கிண்டலாக பேசிய பாலிவுட் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் ஷர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ.  

Dec 16, 2024 - 19:00
 0  3
நிறத்தை வைத்து கிண்டல் - கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த பதிலடி!

மும்பை: தனது நிறம் குறித்து கிண்டலாக பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளரும், பாலிவுட் நடிகருமான கபில் ஷர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. வருண் தவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அட்லீ தயாரித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ளார். படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், இந்தியின் பிரபல டிவி நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் அட்லீ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow