ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் ரகசிய திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் (61), பாயிண்ட் பிரேக், ஸ்பீட், த மாட்ரிக்ஸ், ஜான் விக், டாய் ஸ்டோரி 4 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Sep 24, 2025 - 08:45
 0  3
ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் ரகசிய திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் (61), பாயிண்ட் பிரேக், ஸ்பீட், த மாட்ரிக்ஸ், ஜான் விக், டாய் ஸ்டோரி 4 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெனிஃபர் சைம் என்பவரைக் காதலித்து வந்தார். 1999 ஆம் ஆண்டு இவர்கள் தங்கள் குழந்தையை இழந்தனர். பின்னர் 2001-ம் ஆண்டு ஒரு விபத்தில், 28 வயது ஜெனிஃபர் சைம் உயிரிழந்தார். இதனால் சோகத்திலிருந்த கியானு ரீவ்ஸ், மறு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரா கிராண்ட் என்பவரைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னர் காதலில் விழுந்தனர். 2019-ம் ஆண்டு அதை வெளிப்படையாக அறிவித்தனர்.இந்நிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 52 வயதான அலெக்ஸாண்ட்ரா கிராண்ட், எழுத்தாளர். இவர்கள் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow