‘பேய் கதை’ படத்தில் புதிய முயற்சி: இயக்குநர் தகவல்

அறிமுக நடிகர் வினோத், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பேய் கதை.

Aug 9, 2025 - 08:30
 0  3
‘பேய் கதை’ படத்தில் புதிய முயற்சி: இயக்குநர் தகவல்

அறிமுக நடிகர் வினோத், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பேய் கதை. ஜூன் மோசஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரவீண் எஸ்.ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைத்துள்ளார். ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் சார்பில் ஜெர்ரி தயாரித்துள்ளார். ஆக.29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow