ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் நாளை (ஜூன் 18) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது.

Jun 17, 2025 - 07:15
 0  4
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் நாளை (ஜூன் 18) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. ஹாக்கி இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8அணிகளும் கலந்து கொள்கின்றன. மொத்தம் 20 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

ஆடவர் பிரிவில் 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow