ஸ்விஸ் எனும் சொர்க்கம் 30: வியப்பூட்டிய லொஸான் ரயில் நிலையம்

மருந்தகம் ஒன்றில் தலைவலிக்கான தீர்வு கிடைத்தது. இதற்கென்றே உள்ள ஒரு  கிளினிக்கைச் சுட்டிக் காட்டினர்.  நான் கூறத் தொடங்கியதும், 'உங்கள் டாக்டர் எந்த மருந்தைப் பரிந்துரைத்தார்?’ என்று கேட்டார். நான் பிரிஷ்கிரிப்ஷனைக் கொடுத்தேன்.

Dec 19, 2024 - 14:45
 0  11

லெட்டர் பேடில் அதே மருந்தை எழுதிக் கொடுத்தார். அதில் என் பாஸ்போர்ட் எண்ணையும் குறிப்பிட்டார். அதை அங்கிருந்த மருந்துக் கடையில் கொடுத்து மாத்திரைகளைப் பெற்றுக் கொண்டேன்.
லொஸான் ரயில்வே ஸ்டேஷனில் இதுவரை வேறெங்கும் கண்டிராத ஒன்றைக் கண்டேன். வரவிருக்கும் ரயில் எந்த எண் கொண்ட நடைமேடையில் நிற்கும் என்பதை அறிவிப்பது இந்திய நகரங்களிலும் வழக்கம்தான். ஆனால், அடுத்து வரவிருக்கும் ரயிலில் எந்த கோச்சில் கூட்டம் அதிகமாக இருக்கிறது, எந்த கோச்சில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் முன்னதாகவே அ​​றிவிக்கிறார்கள். எந்தப் பெட்டியில் நாம் ஏறலாம் என்பதைத் தீர்மானிக்க இது பெரும் உதவியாக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow