ஸ்விஸ் எனும் சொர்க்கம் 28: புகழ்பெற்ற சுவிஸ் கடிகாரங்கள்!

ஒமேகா மியூசியம், ஸ்வாச் மியூசியம், ரோலெக்ஸ் மியூசியம் போன்ற பல கடிகார அருங்காட்சியகங்கள் சுவிட்சர்லாந்தில் உண்டு.

Dec 12, 2024 - 13:00
 0  15
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 28: புகழ்பெற்ற சுவிஸ் கடிகாரங்கள்!

ஒமேகா மியூசியம், ஸ்வாச் மியூசியம், ரோலெக்ஸ் மியூசியம் போன்ற பல கடிகார அருங்காட்சியகங்கள் சுவிட்சர்லாந்தில் உண்டு. என்றாலும் பலரும் எங்களுக்குப் பரிந்துரைத்தது ஜெனீவாவிலுள்ள ’பதேக் பிலிப்’ மியூசியத்தை.

உலகின் தலைசிறந்த கடிகாரக் காட்சியகங்களில் ஒன்று இது. கடந்த சில நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் கடிகாரங்களின் உருவாக்க வரலாற்றை இது காட்சிப்படுத்துகிறது. சுமார் 2,500 கைக்கடிகாரங்கள் மற்றும் பாக்கெட் கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை. ஐரோப்பிய வரலாற்றை, குறிப்பாகக் கடந்த கால சுவிட்சர்லாந்தை, நினைவுபடுத்துகின்றன இந்தக் கைக்கடிகாரங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow