ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

Sep 24, 2025 - 12:15
 0  3
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow