வேலூர் அருகே 92 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா விமரிசையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

Jun 8, 2025 - 19:30
 0  4
வேலூர் அருகே 92 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர்: வேலூர் மாவட்டம், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், வேலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டம், ரங்காபுரத்தையொட்டியுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் என்ற இடத்தில் 500 அடி உயரமுள்ள தீர்த்தகிரி மலையில் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு 92 அடி உயரத்தில் உலகிலேயே 3வது அதிக உயரமுள்ள (92 அடி) மிகப்பிரமாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow