வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சந்தூர் ‘மாங்கன்றுகள்’!
சந்தூரில் உற்பத்தி செய்யப்படும் மாங்கன்றுகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை வகிக்கிறது.

கிருஷ்ணகிரி: சந்தூரில் உற்பத்தி செய்யப்படும் மாங்கன்றுகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை வகிக்கிறது. அல்போன்சா, பித்தர், மல்கோவா, பங்கனப்பள்ளி, காலபாட், பெங்களூரா உள்ளிட்ட சுவை மிகுந்த மாங்கனிகள் மூலம் மாங்கூழ், மா ஊறுகாய், மாம்பழ பேஸ்ட், மா சுவைக்கான அடிப்படை மூலப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மா சாகுபடி மூலம் விவசாயிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை தொழிலாளர்கள், மாங்கூழ் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் குடும்பத்தினர் இத்தொழிலால் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாங்கன்று உற்பத்தியில் நேரிடையாகவும், மறைமுகமாவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெற்று வருகின்றனர்.
What's Your Reaction?