கோவைக்கு குறிவைக்கும் கட்சிகளும், தொழில் துறையினர் எதிர்பார்ப்பும்!

கோவை மாவட்டம் ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கிரைண்டர் என உற்பத்தி பிரிவின்கீழ் பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்று விளங்குகிறது.

Nov 11, 2024 - 15:59
 0  4
கோவைக்கு குறிவைக்கும் கட்சிகளும், தொழில் துறையினர் எதிர்பார்ப்பும்!

கோவை: கோவை மாவட்டம் ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கிரைண்டர் என உற்பத்தி பிரிவின்கீழ் பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்று விளங்குகிறது. முன்பு தொழில்துறைக்கு மட்டுமே பெயர் பெற்ற கோவை மாவட்டம் தற்போது கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என இதர துறைகளிலும் புகழ் பெற்று திகழ்கிறது. கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 30 லட்சத்தை கடந்துள்ளது.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசலுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேம்பாலங்கள், சாலை புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ரயில் சேவைகள் அதிகரித்தல், விமான நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துதல் என வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow