வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்
சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

சென்னை: சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’, ‘ஆரம்பம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தவர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சாயிஷாவுடன் திருமணம் நடந்துவந்தது.
What's Your Reaction?