வில்லியம்சன் சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து - ODI Tri Series
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார்.

லாகூர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார். இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரின் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்களில் வென்றது நியூஸிலாந்து. இந்நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி இன்று (பிப்.10) லாகூரில் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவுடன் நியூஸிலாந்து விளையாடியது.
What's Your Reaction?