திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Jan 26, 2025 - 08:25
 0  4
திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயம் காரணமாக நித்திஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல், ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித் சேர்க்கப்பட்டிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow