இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை (டிச.14) பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்கியது.
What's Your Reaction?