விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: டொனால்டு ட்ரம்ப்
இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?