விருச்சிகம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.
உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும்.
What's Your Reaction?