குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ ரிலீஸ் தேதி மாற்றம்! 

குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Dec 18, 2024 - 18:15
 0  5
குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ ரிலீஸ் தேதி மாற்றம்! 

சென்னை: குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் சார்பில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow