விராட் கோலியின் ஃபார்ம் - ‘விரும்பாத’ ஆலன் பார்டர், மகிழ்ச்சியில் திராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார்.

Nov 29, 2024 - 16:30
 0  2
விராட் கோலியின் ஃபார்ம் - ‘விரும்பாத’ ஆலன் பார்டர், மகிழ்ச்சியில் திராவிட்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கோலி பதிவு செய்துள்ள சதம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், முதல் போட்டியில் கோலி சதம் விளாசியது அவர்களை பதற்றம் அடைய செய்துள்ளது.

“எந்தவித சவாலும் கொடுக்காமல் கோலியை சதம் விளாச ஆஸ்திரேலிய அணி அனுமதித்த விதம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்தத் தொடர் முழுவதும் அவருக்கு இதுபோன்ற நம்பிக்கையை நாம் தரக்கூடாது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் நிலையில் ரன் குவிக்க கேப்டன் கம்மின்ஸ் அமைத்த களவியூகமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது” என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow