விரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ரிச்சா கோஷ்: பயிற்சியாளர் பகிர்வு
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் அவர் ஈடுபட்டார்.

அகர்த்தலா: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் அவர் ஈடுபட்டார்.
இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில் இடது கை நடுவிரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் ரிச்சா கோஷ் விளையாடியதாக அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் கூறியுள்ளார்.
What's Your Reaction?