‘விடுதலை பாகம் 2’-ன் முதல் 3 நாள் வசூல் நிலவரம் என்ன?
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 2’ படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 2’ படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. டிசம்பர் 20-ல் ‘விடுதலை பாகம் 2’ திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரூ.8 கோடி வசூலை நெருங்கிய இப்படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் மிகுந்துள்ளன. இதன் எதிரொலியாக, அடுத்த இரு தினங்களில் கூடுதல் வசூலை ஈட்டியுள்ளது. இதன்மூலம், முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?