புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவு
உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

மும்பை: உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று (டிச.23) மாலை 6.30 மணியளவில் பிரிந்தது. அவரது இந்திய மறைவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
கடந்த 14-ம் தேதியன்று ஷியாம் பெனகல் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்நிகழ்வில் அவரது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். நஸ்ருதீன் ஷா, திவ்யா தத்தா, ஷபானா ஆஸ்மி, அதுல் திவாரி, குணால் கபூர் உள்ளிட்ட திரைப் பிரலங்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?