வருமானத்தைப் பெருக்கிய நவீன சூளை | வாழ்ந்து காட்டுவோம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சியில் நவத்தாவு கிராமத்தில் மண்பாண்டத் தொழில்குழு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஒரே தொழில் செய்யும் நபர்களை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சியில் நவத்தாவு கிராமத்தில் மண்பாண்டத் தொழில்குழு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஒரே தொழில் செய்யும் நபர்களை ஒருங்கிணைத்து அவர்களின் தொழிலைப் புதிய முறையில் உற்பத்தி செய்து, அதிக விலைக்கு விற்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, 19 நபர்களைக் கொண்டு சூரக்குளம் மண்பாண்டத் தொழில் குழு உருவாக்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் துவக்க நிதியாக ரூ.75,000 பெற்று அதன் மூலம் மண் அரைக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது.
சூரக்குளம் மண்பாண்டத் தொழில் குழுவிற்கு நவீன முறையில் பொருள்கள் தயாரிக்க சமுதாயத் திறன் பள்ளி ஏற்படுத்தி ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. மண்பாண்டத் தொழில் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். மண்பாண்டத் தொழில் குழுவிற்கு (MGP) இணைமானியத் திட்டத்தின் மூலம் 30% மானியத்துடன் கடன் உதவி ரூ.3,00,000 வங்கியின் மூலம் பெற்று பயனடைந்துள்ளனர்.
What's Your Reaction?