வரிகள், தடைகளை விதித்து இந்தியா, சீனாவை மிரட்டி பணிய​ வைக்க முடியாது: ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு பேச்சு

வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசியாவின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்தியாவையும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படையாகத் தெரி​வித்​துள்​ளார்.

Sep 6, 2025 - 07:55
 0  3
வரிகள், தடைகளை விதித்து இந்தியா, சீனாவை மிரட்டி பணிய​ வைக்க முடியாது: ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு பேச்சு

புதுடெல்லி: வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார்.

சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற எஸ்​சிஓ மாநாடு மற்​றும் ராணுவ பேரணி​யில் பங்​கேற்​றதற்​குப் பிறகு முதல்​முறை​யாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த புதின் இதுகுறித்து மேலும் கூறிய​தாவது: வரி​கள் அதி​கரிப்​பு, வர்த்தக தடைகளை ஏற்​படுத்​து​வது போன்ற செயல்​களால் ஆசி​யா​வில் வலிமை வாய்ந்த பொருளா​தா​ரங்​களைக் கொண்ட நாடு​களான சீனா மற்​றும் இந்​தி​யாவை மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது. காலனித்​துவ சகாப்​தம் இப்​போது முடிந்​து​விட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow