‘அமெரிக்காவின் முழு பலத்தையும் உங்கள் மீது இறக்குவோம்’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது இறங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

நியூயார்க்: “ஈரான் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் அவர்கள் மீது இறங்கும்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, இஸ்ரேலின் ராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தைத் தாக்கியதாக அறிவித்தது. மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானை சுற்றியுள்ள பல இடங்களைத் தாக்கியதாகவும் அது கூறியது.
What's Your Reaction?