ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா
ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு, ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.

ராமேசுவரம்: ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு, ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா துவங்கியது. முதல் நாள் ராவண வதம் நிகழ்ச்சியும், இரண்டாவது நாளான புதன்கிழமை விபீஷணர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூன்றாம் நாளான வியாழக்கிழமை ராமலிங்கப் பிரதிஷ்டையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 4 மணி முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் காலை நேரப் பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன.
What's Your Reaction?