‘ராக்காயி’ டைட்டில் டீசர் எப்படி? - நயன்தாராவின் ஆக்‌ஷன் அவதாரம்! 

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்  நடித்துள்ள ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Nov 18, 2024 - 16:40
 0  4
‘ராக்காயி’ டைட்டில் டீசர் எப்படி? - நயன்தாராவின் ஆக்‌ஷன் அவதாரம்! 

சென்னை: நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி?: இருள் சூழ்ந்த லாங் ஷாட்டில் குழந்தை அழும் சத்தம் ஒருபுறமும் மறுபுறம் இடி இடிக்கும் சத்தமும் கேட்கிறது. சுற்றிலும் கட்டிடங்களே இல்லாத காலியான இடத்தில் ஒரே ஒரு வீடு. அதில் அழும் குழந்தையை கவனிக்காமல் மிளகாயை இடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவரைக் கொல்ல வெளியில் ஒரு கூட்டமே நிற்கிறது. அடுத்து குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு சண்டைக்கு தயாராகிறார். அடுத்த ஷாட்டே அருவாளுடன் கம்பீரமாக நிற்கிறார். முன்னாலிருக்கும் கூட்டத்தை கண்டு அசராமல் ஆக்‌ஷனில் இறங்கும் அவர் எதிரிகளை அடித்து துவம்சம் செய்ய இறுதியில் முன்பு அரைத்த மிளகாய் பொடியை தூவுவதுடன் டீசர் நிறைவு பெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow