ராகுல் அரை சதம்: சிஎஸ்கே-வுக்கு 184 ரன்கள் இலக்கு | CSK vs DC

நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது.

Apr 5, 2025 - 18:05
 0  2
ராகுல் அரை சதம்: சிஎஸ்கே-வுக்கு 184 ரன்கள் இலக்கு | CSK vs DC

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது.

சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெஸ்​ஸிஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. சென்னை அணியில் கான்வே விளையாடுகிறார். இந்த ஆட்டத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அவர் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow