யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்த ‘ஜான்விக்’ பட ஸ்டன்ட் இயக்குநர்!

ஹாலிவுட்டில் ஆக்ஷனில் வரவேற்பை பெற்ற ‘ஜான்விக்’ படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் யஷ் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Nov 11, 2024 - 16:14
 0  3
யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்த ‘ஜான்விக்’ பட ஸ்டன்ட் இயக்குநர்!

சென்னை: ஹாலிவுட்டில் ஆக்‌ஷனில் வரவேற்பை பெற்ற ‘ஜான்விக்’ படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow