ரூ.200 கோடி வசூலை எட்டிய ‘அமரன்’ - சாதிக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, சிவகார்த்திகேயனின் கரியரில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

Nov 11, 2024 - 16:14
 0  3
ரூ.200 கோடி வசூலை எட்டிய ‘அமரன்’ - சாதிக்கும் சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, சிவகார்த்திகேயனின் கரியரில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow