மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.30 - நவ.5

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.30 - நவ.5

Oct 30, 2025 - 14:30
 0  3
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.30 - நவ.5

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow